தர்மபுரி அருகேதனியார் நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் தர்மபுரிக்கு வந்தார். இதையடுத்து குண்டல்பட்டி பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளை தங்கும் விடுதியின் கீழ் பகுதியில் நிறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதன் மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும். பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன்குமார் இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.