சூளகிரி அருகேவிவசாயி வீட்டில் 13 பவுன் நகை,ரூ.16 ஆயிரம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சூளகிரி அருகேவிவசாயி வீட்டில் 13 பவுன் நகை,ரூ.16 ஆயிரம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 March 2023 12:30 AM IST (Updated: 17 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே விவசாயி வீட்டில் 13 பவுன் நகை, ரூ.16 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஆலுசோனை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா. விவசாயி. இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் தோட்டத்திற்கு விவசாய பணிக்கு சென்றார். இவருடைய மகன் ரமேஷ் ஓசூரில் உள்ள தனியார் உணவகத்தில் பணிக்காக சென்று விட்டார்.

மேலும் வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டிவிட்டு விவசாய கூலி வேலைக்கு சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 13 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.16 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டனர்.

வலைவீச்சு

இந்த நிலையில் மாலையில் ரமேஷ் பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story