டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு

வடுகம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராசிபுரம்
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வடுகத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் விற்பனையாளராக சரவணன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மதியம் வழக்கம்போல் டாஸ்மாக் கடைக்கு விற்பனையாளர் சரவணன் வந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேல் கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 96 மதுபான பாட்டில்களை (2 கேஸ்) திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்கள் யார்? என்று தெரியவில்லை. கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை கொண்டு போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.






