பள்ளியில் மடிக்கணினி, கேமரா திருட்டு


பள்ளியில் மடிக்கணினி, கேமரா திருட்டு
x

பெரியகுளத்தில் தனியார் பள்ளியில் மடிக்கணின், கேமரா திருடுபோனது.

தேனி

பெரியகுளம் தென்கரையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது அங்கிருந்த மடிக்கணினி, கேமரா உள்ளிட்டவற்றை திருடிவிட்டு தப்பி சென்றனர்.

இதற்கிடையே இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஊழியர்கள், தலைமை ஆசிரியர் அறையின் கதவு திறக்கப்பட்டு, அங்கிருந்த மடிக்கணினி, கேமரா திருட்டுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story