டாஸ்மாக் கடையில் திருட்டு... காவலாளியை கட்டி வைத்து கொள்ளையடித்த மர்மநபர்கள்


டாஸ்மாக் கடையில் திருட்டு... காவலாளியை கட்டி வைத்து கொள்ளையடித்த மர்மநபர்கள்
x

காவலாளியை கை, கால்களை கட்டி வைத்த கொள்ளையர்கள், வாயில் துணியை வைத்து அடைத்து கொள்ளையடித்துள்ளனர்.

அரியலூர்,

டாஸ்மாக் கடைக்குள் புகுந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 30 பெட்டி மதுபானங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை அரியலூர் போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் கல்லூர் பாலத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்கில் இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

டாஸ்மாக் காவலாளியான அப்துல் ரத்தீப் என்பவரை பிடித்து, கை, கால்களை கட்டி வைத்த கொள்ளையர்கள், வாயில் துணியை வைத்து அடைத்து கொள்ளையடித்துள்ளனர். சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 30 பெட்டி மதுபானங்கள் திருடப்பட்டிருப்பது தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குரங்கு குல்லா அணிந்திருந்த கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story