கோவிலில் திருட்டு


கோவிலில் திருட்டு
x

விளாத்திகுளம் அருகே கோவிலில் திருட்டு

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமம் பெரிய கண்மாய் கரையில் கருப்பசாமி கோவில் உள்ளது. வழக்கம் போல் பூஜை செய்வதற்காக நேற்று காலையில் பூசாரி பாலமுருகன் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்துள்ளது. கோவிலுக்குள் இருந்த ரூ. 17 ஆயிரம் மதிப்பிலான ரேடியோ ஆம்ப்ளிபயர் திருடப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.Next Story