மயிலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
மயிலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடி சென்று விட்டனா்.
விழுப்புரம்
மயிலம்,
மயிலம் அருகே கர்ணாவூரில் பஞ்சனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
சம்பவத்தன்று இரவு, மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றுவிட்டனர். உண்டியலில் சுமார் ரூ.30 ஆயிரம் இருந்து இருக்கும் என கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story