ஒர்க் ஷாப்பில் திருட்டு
சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே உள்ள ஒர்க் ஷாப்பில் திருடு போனது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவர் சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே வணிக வளாகம் ஒன்றில் மெக்கானிக் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையை திறந்து பார்த்த போது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ஆயில், இரும்பு கம்பி மற்றும் உபகரணங்கள் போன்ற பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சேரன்மாதேவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story