வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள்-ரூ.3 லட்சம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள்-ரூ.3 லட்சம் திருட்டு
x

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள்-ரூ.3 லட்சம் திருட்டுபோனது.

திருச்சி

கல்லக்குடி:

நகை-பணம் திருட்டு

புள்ளம்பாடி சத்திர தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் சேவியர்(வயது 54). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு, தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கினார். நேற்று அதிகாலை எழுந்து வீட்டின் கீழ்பகுதிக்கு வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததோடு, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பீரோவில் பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த நகைகளை காணவில்லை. இது குறித்த தகவலின்பேரில் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் நெக்லஸ், சங்கிலி உள்பட 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடிக்கணினி-மொபட்

இதேபோல் புள்ளம்பாடி ஈ.வி.ஆர். தெருவில் வசித்து வருபவர் ரமேஷ்(35). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு புள்ளம்பாடியில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்துள்ளது. மேலும் வீட்டின் மேஜையில் இருந்த மடிக்கணினி, செல்போன் மற்றும் அவரை பார்க்க வந்த அவரது மாமாவின் மொபட்டும் திருட்டு போயிருந்தது. இது குறித்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story