மின்மாற்றிகளில் 600 கிலோ காப்பர் கம்பிகள் திருட்டு


மின்மாற்றிகளில் 600 கிலோ காப்பர் கம்பிகள் திருட்டு
x

ரிஷிவந்தியம் பகுதியில் மின்மாற்றிகளில் 600 கிலோ காப்பர் கம்பிகள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அடுத்த அலியாபாத், காட்டுஎடையார் பாளையம் மற்றும் காட்டுசெல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள மின்மாற்றிகளை மர்மநபர்கள் சேதப்படுத்தி அதில் இருந்த சுமார் 600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச்சென்றனர். இது குறித்து ஜி.அரியூர் மின்வாரிய இளமின்பொறியாளர் கிருபாகரன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story