10 பவுன் நகையுடன் கைப்பை திருட்டு


10 பவுன் நகையுடன் கைப்பை திருட்டு
x

10 பவுன் நகையுடன் கைப்பை திருட்டு போனது

திருச்சி

திருச்சி உறையூர் மருதாண்டகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி ரமாரேவதி (வயது 35). சம்பவத்தன்று இவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு நீராவி குளியல் மேற்கொள்ள சென்றார். அப்போது, தான் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை கழற்றி கைப்பையில் போட்டு, அதை அங்கிருந்த அலமாரியில் வைத்துவிட்டு குளிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, நகை இருந்த கைப்பையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அவருடைய கைப்பையை திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story