இரும்பு தகடுகள் திருட்டு
இரும்பு தகடுகள் திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலி
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் அருகே தினையூரணி பகுதியில் வெள்ளநீர் கால்வாய் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கான்கிரீட் அமைப்பதற்காக இரும்பு தகடுகளை தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் வைத்திருந்தனர். சம்பவத்தன்று அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட இரும்பு தகடுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.59 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து தனியார் ஒப்பந்த நிறுவன கணக்காளர் பாலாஜி அளித்த புகாரின்பேரில், வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவசுலிங்கம் வழக்குப்பதிவு செய்து, இரும்பு தகடுகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story