நகை, பணம் திருட்டு
நகை, பணம் திருட்டு போனது.
சிவகங்கை
மதகுபட்டியை அடுத்துள்ள கீழப்பூங்குடியை சேர்ந்தவர் ஆதிராமன். பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா. மகன் பிரவீன்குமார். ஆதிராமன் நேற்று காலை வழக்கம்போல் பெட்டிக்கடைக்கு சென்றார். விஜயா, பிரவீன்குமார் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சிவகங்கையில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம், ¾பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது தொடர்பாக மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story