வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டு
மேல்மலையனூர் அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடு போனது.
மேல்மலையனூர்,.
வெற்றிலை வியாபாரி
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையை சேர்ந்தவர் அனீப் (வயது 83). வெற்றிலை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திருப்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்து பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 1 பவுன் நகை மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை காணவில்லை. அதை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து அனீப் அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.