ஜவுளிக்கடையில் பணம், துணி திருட்டு


ஜவுளிக்கடையில் பணம், துணி திருட்டு
x
தினத்தந்தி 5 July 2023 12:45 AM IST (Updated: 5 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஜவுளிக்கடையில் பணம், துணி திருட்டு

கோயம்புத்தூர்

கோவை

கோவை பீளமேடு எஸ்.டி.வி நகரை சேர்ந்தவர் பிரதீஷ் (வயது29). இவர் கோவை-அவிநாசி ரோடு நவஇந்தியாவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ.23,500 மற்றும் துணிகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீஷ் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.


Next Story