மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
விருதுநகர் அருகே உள்ள பாலைவனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன்(வயது 37). இவர் தனது மோட்டார் சைக்கிளை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தனது மனைவியின் தம்பி கிஷோரிடம் கொடுத்து இருந்தார் அவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி விட்டது. இது பற்றிய புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் கூடலிங்கம்(26). இவர் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள பிள்ளைக்குழி என்ற இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடைபயிற்சியில் ஈடுபட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கூடலிங்கம் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகாசி உட்கோட்டத்தில் சமீப காலமாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ச்சியாக காணாமல் போகிறது. எனவே உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி மோட் டார் சைக்கிள்களை திருடும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து மோட்டார் சைக்கிள்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.