பெரியகுளத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
பெரியகுளத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடுபோனது.
பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் மணிமாறன். இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து மணிமாறன், தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதேபோல் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (52). இவர் சம்பவத்தன்று பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மனோகரனின் மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த 2 புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடுபோன மோட்டார் சைக்கிளையும், அவற்றை திருடிய நபர்களையும் தேடி வருகின்றனர்.