வருவாய் ஆய்வாளரின் மொபட் திருட்டு


வருவாய் ஆய்வாளரின் மொபட் திருட்டு
x

வருவாய் ஆய்வாளரின் மொபட் திருட்டுபோனது.

திருச்சி

*மணப்பாறை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜலெட்சுமி. தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது மொபட்டை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். அந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

*ஸ்ரீரங்கத்தில் இந்து முன்னணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாவட்ட செயலாளர் சுரேஷ் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 43 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தாலிச்சங்கிலி பறிப்பு

*திருச்சி குழுமணிசாலை, குறிஞ்சி நகர் பகுதியில் வீட்டிலிருந்த மனோகரி (40) என்ற பெண்ணிடம், நைசாக பேச்சுக்கொடுத்து, அவரது கழுத்தில் கிடந்த 1¼ பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

கட்டுப்பாட்டு அறை திறப்பு

*திருச்சி கோட்டத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டத்தில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு படை முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஜி.எம். ஈஸ்வர ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறை, ரெயில்வே பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய பூப்பந்து மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்தார். விழாவில் ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், மூத்த கோட்ட பாதுகாப்பு ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கிணற்றில் விழுந்தவர் சாவு

*தா.பேட்டையை அடுத்த வாளவந்தி ஊராட்சியை சேர்ந்த பள்ளிநத்தம் தெற்கு தெருவில் வசித்து வந்தவர் தங்கராசு(65). இவர் தனது தோட்டத்து கிணற்றின் ஓரத்தில் இடையூறாக இருந்த புல் செடிகளை வெட்டி சுத்தம் செய்தபோது, நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து, பரிதாபமாக இறந்தார்.

*ெதாடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் 42-வது நாளான நேற்று முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

*சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ.1 கோடியே 7 லட்சமும், 2 கிலோ 931 கிராம் தங்கமும், 4 கிலோ 820 கிராம் வெள்ளியும், 391 அயல் நாட்டு பணமும், 3,347 அயல் நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மணல் திருட்டு

*நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் பகுதியில் கொள்ளிடம் போலீசார் ஒரு மினி லாரியை நிறுத்தி விசாரித்தனர். இதில், நம்பர் ஒன் டோல்கேட், பங்கையர்செல்வி பகுதியை சேர்ந்த அம்மாசி உள்ளிட்ட சிலர் மாட்டுவண்டி மூலம் கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி, லாரியில் கொண்டு சென்று விற்றது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த அசோக்மேத்தா, ரகுநாத் மற்றும் அம்மாசி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story