மோட்டார்சைக்கிள்களில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் திருட்டு

மோட்டார்சைக்கிள்களில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் திருட்டு
x

செங்கம் நகரில் வங்கியில் இருந்து எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை மோட்டார்சைக்கிள்களில் இருந்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் நகரில் வங்கியில் இருந்து எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை மோட்டார்சைக்கிள்களில் இருந்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வங்கியில் பணம் எடுத்தனர்

செங்கம் அருகே மேல்வணக்கம்பாடியை சேர்ந்தவர்கள் சிவலிங்கம் (வயது 59), சம்பத் (55).

இந்த நிலையில் இன்று சிவலிங்கம் செங்கத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.30 ஆயிரமும், சம்பத் வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் எடுத்தனர்.

பின்னர் அவர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் பணத்தை வைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது பெங்களூரு நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு இருவரும் வேறு பணிக்கு சென்றுள்ளனர்.

பணம் திருட்டு

மீண்டும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள்களில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து செங்கம் போலீஸ் நிலையத்தில் இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர்.

அதன்பேரில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story