ஸ்கூட்டரில் ரூ.1 லட்சம் திருட்டு


ஸ்கூட்டரில் ரூ.1 லட்சம் திருட்டு
x
சேலம்

சங்ககிரி:-

சங்ககிரி அருகே மாவெளிபாளையம் பகுதிைய சேர்ந்தவர் நடேசன் (வயது 64), விவசாயி. இவர் கடந்த 28-ந் தேதி சங்ககிரியில் உள்ள வங்கிக்கு சென்று பயிர்க்கடன் தொகை ரூ.1 லட்சத்தை வாங்கினார். அந்த பணத்தை பையில் எடுத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார். பின்னர் தனது ஸ்கூட்டரில் உள்ள பெட்டியில் பணத்தை வைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். செல்லும் வழியில் தோப்புக்காடு சண்முகம் என்பவர் வீட்டுக்கு சென்று சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

பின்னர் அங்கிருந்து நடேசன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றார். வீட்டில் சென்று வண்டி பெட்டியை திறந்து பார்த்த போது அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெட்டியில் இருந்த பணம் திருட்டு போனது குறித்து அவர் சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story