பஸ்சில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் திருட்டு


பஸ்சில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் திருட்டு
x

ஆலங்குளத்துக்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் திருட்டு போனது.

தென்காசி

ஆலங்குளம்:

தென்காசியை அடுத்த மேலமெஞ்ஞானபுரம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்லையா மனைவி காந்திமதி (வயது 48). இவர் தங்க கம்மல் வாங்குவதற்காக மேலமெஞ்ஞானபுரத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி ஆலங்குளம் வந்தார். இங்கு பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் தனது கைப்பையை பார்த்தபோது, அதில் இருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story