தேனி: ஏலக்காய், மாங்காய் ஏற்றுமதி கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - ரசாயனம் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு


தேனி: ஏலக்காய், மாங்காய் ஏற்றுமதி கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - ரசாயனம் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு
x

செயற்கை முறையில் மாங்காய்களை பழுக்க வைக்க ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

தேனி,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள தனியார் ஏலக்காய் தரம்பிரிக்கும் மையங்கள் மற்றும் மாங்காய் ஏற்றுமதி கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஏலக்காய் தரம்பிரிக்கும் மையங்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது தெரியவந்தது.

கண்ணாடி டம்ளரில் போடப்பட்ட ஏலக்காயில் உள்ள செயற்கை நிறமூட்டிகள் கரைந்து நிறம் மாறி காட்சியளித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உடனடியாக மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், முககவசம், மருத்துவ காப்பீடு, மருத்துவ ஆய்வு சான்றிதழ் என 12 வகை பாதுகாப்பு முறைகள கடைப்பிடிக்கப்படாத மையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாங்காய் ஏற்றுமதி செய்யப்படும் கிடங்குகளில் நடந்த ஆய்வில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்க ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைக்க முயற்சி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



Next Story