குணசீலம் பிரசன்ன ெவங்கடாஜலபதி கோவிலில் தெப்ப உற்சவம்


குணசீலம் பிரசன்ன ெவங்கடாஜலபதி கோவிலில் தெப்ப உற்சவம்
x

குணசீலம் பிரசன்ன ெவங்கடாஜலபதி கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

திருச்சி

முசிறி அருகே உள்ள குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. தென்திருப்பதி என அழைக்கப்படும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பவுர்ணமி அன்று தெப்ப உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இந்த நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக இரவு 7 மணிக்கு பெருமாள்- உபய நாச்சியார்களுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது அதைத்தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது.தொடர்ந்து 8 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, வெள்ளி கேடயத்தில் பெருமாள்- தாயார் தெப்பத்தில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பிறகு மைய மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு பெருமாள் தாயாருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளி தொடர்ந்து நான்கு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தெப்பத்தின் நான்கு புறங்களிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக கூடி நின்று பெருமாள்- தாயாரை பய பக்தியுடன் வணங்கினர்.

தொடர்ந்து இரவு 10 மணிக்கு பெருமாள்- தாயார் கண்ணாடி அறை சேவை நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை டிரஸ்டி கே.ஆர்.பிச்சுமணி ஐயங்கார் தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.


Next Story