`இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு உள்ளது' டி.டி.வி.தினகரன் பேட்டி


`இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு உள்ளது டி.டி.வி.தினகரன் பேட்டி
x

`இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு உள்ளது' டி.டி.வி.தினகரன் பேட்டி.

நெல்லை,

நெல்லையில் நேற்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பது போல் அ.தி.மு.க.வும் வேட்பாளரை அறிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து கையெழுத்து போட்டால் தான் இரட்டை இலை கிடைக்கும். இருவரும் இணைந்து கையெழுத்து போடவில்லை என்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இதற்கு தான் வாய்ப்பு அதிகம் உள்ளது.

2017-ம் ஆண்டு நான் போட்டியிடும்போது இதைபோல் ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அந்த நிலை தான் தற்போதும் வருவதற்கு வாய்ப்புள்ளது. தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணையும் காலம் விரைவில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story