ஒற்றை தலைமையில் மாற்றமில்லை - எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி


ஒற்றை தலைமையில் மாற்றமில்லை -  எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 18 Aug 2022 6:24 AM GMT (Updated: 18 Aug 2022 6:24 AM GMT)

ஒற்றை தலைமை கொள்கையில் அதிமுகவினர் கருத்தில் மாற்றமில்லை என்றார்.

சென்னை,

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நேற்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்தார் அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார் கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.இணைந்து செயல்பட ஒ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ கடம்பூர் செ.ராஜூ கூறியதாவது ;

'ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட்டு முடிவு செய்துவிட முடியாது. அரசியல் கட்சியை பொறுத்தவரை கட்சியை வழிநடத்துவது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தான்.ஒற்றை தலைமை கொள்கையில் அதிமுகவினர் கருத்தில் மாற்றமில்லை என்றார்.


Next Story