திமுக அடையாத புகழும் இல்லை, படாத அவமானங்களும் இல்லை; முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திமுக அடையாத புகழும் இல்லை, படாத அவமானங்களும் இல்லை;  முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

திமுக அடையாத புகழும் இல்லை, படாத அவமானங்களும் இல்லை என முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்று வரும் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி சென்றடைந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிப்பட்டி தனக்கு ஆச்சரியப்பட்டியாக தெரிகிறது. திமுக என்பது அரசியல் கட்சி மட்டுமல்ல, இது கொள்கைகளின் கோட்டை என்றார்.

கருணாநிதி கூறிய 5 முழக்கங்கள் மற்றும் நான் கூறிய 5 முழக்கங்கள் தான் திமுகவின் கொள்கைகள். இந்த நாட்டில் திமுகவை போல் வெற்றி பெற்ற கட்சியும் இல்லை, தோல்வி அடைந்த கட்சியும் இல்லை இரண்டுமே நமக்குதான் பெருமை.

நாம் அடையாத புகழும் இல்லை, நாம் படாத அவமானங்களும் இல்லை, நாம் செய்யாத சாதனைகளும் இல்லை, அடையாத வேதனைகளும் இல்லை.


Next Story