செண்பகத்தோப்பு வனப்பகுதிக்குள் செல்ல பணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்-மான்ராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை
செண்பகத்தோப்பு வனப்பகுதிக்குள் செல்ல பணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மான்ராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
செண்பகத்தோப்பு வனப்பகுதிக்குள் செல்ல பணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மான்ராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.
செண்பகத்தோப்பு வனப்பகுதி
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே செண்பகத்தோப்பு மலைப்பகுதி உள்ளது. இது அடர்ந்த வனப்பகுதியாகும். இப்பகுதியில் உள்ள பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் மற்றும் காட்டழகர் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும்போது செண்பகத்தோப்பு மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை சார்பில் ரூ.20 பக்தர்களிடம் வசூலிப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து உள்ளனர்.
இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. மான்ராஜ் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக வனத்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
பணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்
செண்பகத்தோப்பு வனப்பகுதிக்குள் உள்ள கோவில்களுக்கு செல்வதற்கு பக்தர்களிடம் 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.