மதுபாட்டிலில் தீக்குச்சி கிடந்ததால் பரபரப்பு


மதுபாட்டிலில் தீக்குச்சி கிடந்ததால் பரபரப்பு
x

திருச்சியில் மதுபாட்டிலில் தீக்குச்சி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏலூர்ப்பட்டி அரசு டாஸ்மாக் கடையில் கல்லூர்ப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஸ்ரீதர் (வயது 34) என்பவர் 2 மது பாட்டில்களை வாங்கியுள்ளார். பின்னர் ஒரு மதுபாட்டிலை திறந்து பார்த்தபோது அதில் முழு தீக்குச்சி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த தீக்குச்சியில் உள்ள கந்தகம் முழுவதும் மதுவில் கலந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவத்தை அறிந்த மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதேபோல் கடந்த மாதம் மது பாட்டில் உள்ளே சோடா மூடி கிடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story