கமிஷனர், நகராட்சி அதிகாரிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு


கமிஷனர், நகராட்சி அதிகாரிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:46 PM GMT)

கீழக்கரை நகா்மன்ற கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் கமிஷனர் வாக்குவாதத்தால் கமிஷனர் உள்பட அதிகாரிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

ராமநாதபுரம்

கீழக்கரை

கீழக்கரை நகா்மன்ற கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் கமிஷனர் வாக்குவாதத்தால் கமிஷனர் உள்பட அதிகாரிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

நகா்மன்ற கூட்டம்

கீழக்கரை நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் ஒருமையில் பேசியதால் கமிஷனர் உள்பட அனைத்து அதிகாரிகள் வெளிநடப்பால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்களை ஆலோசிக்காமல் அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இந்தநிலையில் வரி வசூல் குறித்து கவுன்சிலர் முகமது காசிம் மற்றும் கமிஷனர் மத்தியில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது கவுன்சிலர் முகமது காசிம் கமிஷனரை ஒருமையில் பேசியதால் கமிஷனர் உள்பட அனைத்து நகராட்சி அதிகாரிகளும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நகர் மன்ற துணைத் தலைவர் சமாதானம் பேசியதை தொடர்ந்து மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இதனால் சிறிது நேரம் நகர் மன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தீர்மானம்

கழிவுநீர் பிரச்சினை சரி செய்தல், மின் கட்டணம் கணக்கெடுப்பில் குளறுபடி போன்றவற்றால் பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர் என்றும் நேற்று நடைபெற்ற நகர் சபா கூட்டம் முன்னறிவிப்பின்றி நடைபெற்றதால் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் இது போன்ற கூட்டத்திற்கு முன்கூட்டியே கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கவுன்சிலர் முகமது பாதுஷா கூறினார்.

நகர் மன்றத்தில் வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும் கவுன்சிலர்கள் கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகர் மன்ற தலைவர் கூறினார். கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, நகராட்சி கமிஷனர் செல்வராஜ், நகர் மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் தலைமையில் கவுன்சிலர்கள் முகமது காசிம், நசீருதீன், மீரான் அலி, ஹாஜா சுஹைபு, பயாஸ்தீன், சித்தீக் உள்பட அனைத்து கவுன்சிலர்கள் முன்னிலையில் நகராட்சி பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, இளநிலை உதவியாளர்கள் தமிழ் செல்வன், உதயகுமார், சரவண குமார் உள்பட நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story