உதகை அருகே அமைச்சர் ராமச்சந்திரன் சென்ற வாகனம் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு


உதகை அருகே அமைச்சர் ராமச்சந்திரன் சென்ற வாகனம் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு
x

அமைச்சர் மற்றும் கலெக்டர் சென்ற வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகையில் மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அவ்வபோது துறை சார்ந்த அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் கட்டுமான பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்றனர். நீலகிரியில் நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக சாலை சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

இதனால் அமைச்சர் மற்றும் கலெக்டர் சென்ற வாகனம் ஒரு வளைவில் திரும்பிய போது நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் சற்று கீழே இறங்கியது. அப்போது ஓட்டுநர் சாதுர்யமாக பிரேக் பிடித்து நிறுத்திய காரணத்தால் வாகனம் மேற்கொண்டு பள்ளத்தில் இறங்காமல் நின்றது. பின்னர் சற்று நேரத்திற்குப் பிறகு வாகனம் பத்திரமாக மேலே ஏற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story