தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
x

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திறமையான ஆட்சியை பார்த்து மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

உடன்குடி,

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திறமையான ஆட்சியை பார்த்து மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம் ஏற்பாட்டில் ஏரல் பேரூராட்சி 4 வார்டு அ.ம.மு.க. நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்து பொன்னாடை அணிவித்து தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

அப்போது அமைச்சர் கூறியதாவது,

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எந்த குறைபாடும் சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து ஜாதி, மதத்தினரை அரவணைத்து அமைதியான தமிழகமாக மாற்றி ஆட்சி செய்து வருகிறார்.

இவரது திறமையை பார்த்து மாற்று கட்சியினர் கூட்டம் கூட்டமாக தி.மு.க.வில் இணைந்து கொண்டே இருக்கின்றனர். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணிவண்ணன், ஊராட்சி துணைத்தலைவர் ஜான் உட்பட தி.மு.க.வினர் பலர் உடனிருந்தனர்.


Next Story