செல்வநாயகி அம்மாள் ஆலய தேர்பவனி


செல்வநாயகி அம்மாள் ஆலய தேர்பவனி
x

செல்வநாயகி அம்மாள் ஆலய தேர்பவனி நடந்தது.

திருச்சி

திருச்சி முதலியார்சத்திரம் ஆலம்தெருவில் அமைந்துள்ள புனித செல்வநாயகி அம்மாள் ஆலய ஆண்டு திருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் மாலையில் மறையுரையுடன் நவநாள் திருப்பலி நடைபெற்றது. அன்னையின் மின் அலங்கார தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. தூய மரியன்னை பேராலய பங்குத்தந்தை சவரிராஜ் அடிகளார் தேர்பவனியை தொடங்கி வைத்தார். இதில் கவுன்சிலர் ரிஸ்வானா பானு மற்றும் ஆலய நிர்வாகிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர் ஆலம்தெரு, முதலியார் சத்திரம் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இன்று (திங்கட்கிழமை) மாலை ஆடம்பர திருப்பலியும், அதன்பிறகு கொடி இறக்கமும் நடக்கிறது.


Next Story