வீடு புகுந்து 3 பீரோக்களை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை
பண்ருட்டியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 3 பீரோக்களை உடைத்து ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி,
3 பீரோக்கள் உடைப்பு
பண்ருட்டி வ.உ.ச. நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, பொருட்கள் அனைத்து சிதறி கிடந்தன.
ரூ5 லட்சம் கொள்ளை
மேலும் பீரோவை சோதனை செய்த போது அதில் வைத்திருந்த ரூ.5 லட்சம் ரொக்கத்தை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ. 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தொிந்தது. இதுகுறித்து ராமச்சந்திரன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து 3 பீரோக்களை உடைத்து ரூ.5 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.