வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போனது

சிவகங்கை

திருப்புவனம்

திருப்பாச்சேத்தி அருகே உள்ள மழவராயனேந்தல் விலக்கு பகுதியில் வசித்து வருபவர் ராஜாங்கம். இவரது மனைவி நாகவள்ளி(வயது 43). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். 2 நாட்கள் கழித்து வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ரொக்கம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் மதுரை மாவட்டம், யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த குணாளன்(23) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் கொடுத்த தகவலின்பேரில் பட்டணம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற பொட்டுக்கடலையையும் (24) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story