வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
மதுரை
திருமங்கலம்
திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி(வயது 70), இவர் சந்தைப்பேட்டை பெத்தண சுவாமி கோவில் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 24-ந் தேதி மணப்பாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 மோதிரங்கள் 2½ பவுன் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், திருமங்கலம் நகர் போலீசார் மற்றும் மோப்பநாய் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story