திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 27-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை வீமன் சூரமுனிக்கு சாதம் கொடுத்தல் நிகழ்வும், இரவில் அம்மன் திருக்கல்யாண உற்சவமும், அதனை தொடர்ந்து சுவாமி வீதி உலா, கரகாட்டம், வாணவேடிக்கையுடன் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதித்தல் நேற்று மாலை நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று காலை அர்ச்சுணன் மாடு திருப்புதலும், சங்கரன் கோட்டை இடித்தலும், மதியம் அரவான் பலியும் நடந்தது. மாலை 5 மணிக்கு நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அக்னி குண்டத்தில் இறங்கி சென்றனர். தீமிதி திருவிழாவில் அனுக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு தேர்பவனி நடந்தது. இரவில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராடுதல், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் வைத்தல், மாவிளக்கு, படுகளம், கூந்தல் முடிப்பு ஆகியவை நடைபெறுகிறது. வருகிற 6-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.


Next Story