மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்


மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
x

வாக்காளர் பட்டியலில் மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு சுருக்கத் திருத்தம் பணியின் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் தற்போது வரை பெயர் சேர்க்காமல் உள்ள மூன்றாம் பாலினத்தவர்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதில் வாக்காளர் சேர்ப்பு படிவங்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பெற்றுக்கொண்டார்கள். சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பாக 31 படிவங்கள் பெறப்பட்டது.


Next Story