திருச்செந்தூர்- பாலக்காடு ெரயில் நடுவழியில் நிறுத்தம்


திருச்செந்தூர்- பாலக்காடு ெரயில் நடுவழியில் நிறுத்தம்
x

என்ஜின் பழுதால் திருச்செந்தூர்- பாலக்காடு ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

விருதுநகர்


திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் ெரயில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் விருதுநகர் ெரயில் நிலையம் வந்தடைய வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் வந்தபோது என்ஜின் பழுது காரணமாக அங்கேயே நிறுத்தப்பட்டது. 1 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டு பின்னர் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு மாலை 4.45 மணியளவில் விருதுநகர் ெரயில் நிலையம் வந்தடைந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.



Related Tags :
Next Story