பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
x

ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் பட்டாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமங்கள் நடந்தது.

இதைத்தொடர்ந்து பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கும் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் மங்கள மேளவாத்தியங்கள் முழங்க மாலை மாற்றிக் கொண்ட நிகழ்ச்சி நடந்தது.

இதில் நல்லூர், சோகத்தூர், ஓசூர், வந்தவாசி, முதலூர், படூர் உள்ளிட் பல கிராமத்தில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story