சீனிவாச கல்யாண பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்


சீனிவாச கல்யாண பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்
x

திமிரியில் சீனிவாச கல்யாண பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பாலூர் பிருந்தாவனம் நகரில் உள்ள அம்மச்சார் அம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச கல்யாண பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத யாகசாலை நடைபெற்றது. பின்னர் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சீனிவாச கல்யாண பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து பட்டு உடுத்தி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story