மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
பரமத்திவேலூரில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூரில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாத பெருமானுக்கு திருக்கல்யாணம் மற்றும் 63 நாயன்மார்களின் ஆராதனை விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 12-ந் தேதி காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் காலை திருவாசகம்முற்றோதலும், இரவு பெண் அழைப்பு நிகழ்ச்சியில் வேலூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை தட்டுகளுடன், பூரண கும்பங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வேலூர் மாணிக்கவாசகர் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை திருக்கல்யாண உற்சவமும், மாலை மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் சுந்தரேஸ்வர பெருமான் திருமண கோலத்திலும் மற்றும் 63 நாயன்மார்களின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.