சுடுகாட்டு பாதை வேண்டி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் முற்றுகை


சுடுகாட்டு பாதை வேண்டி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
x

சுடுகாட்டு பாதை வேண்டி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பெரும்பேடு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதி மக்கள் கிராம பகுதியில் உள்ள சுடுகாட்டிற்க்கு செல்ல தொடர்ந்து அந்த வழியை பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது சுடுகாட்டிற்க்கு செல்லும் சாலை தனிநபர் ஒருவருடைய இடமாக இருந்த நிலையில் வெளியூரை சேர்ந்த மற்றொருவர் அந்த இடத்தை வாங்கி அந்த பகுதி முழுவதும் முள்வேலி அமைப்பதால் அந்த பகுதியில் யாரேனும் இறந்தால் சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல வழியில்லாமல் மிகவும் சிறமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் மீண்டும் சுடுகாட்டுக்கு பாதை வேண்டி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம், திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம். என அனைத்து அலுவலகங்களில் அந்த பகுதி கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதால் 100-க்கும் மேற்பட்டோர் திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர்.

அதனை தொடர்ந்து தாசில்தார் ராஜேஸ்வரி கிராம மக்களிடையே பேச்சு வார்தை நடத்திய பின்னர் பிரச்சினைக்குரிய இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்ததன் போரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story