ஒண்டிவீரன் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை


ஒண்டிவீரன் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை
x

நெல்லையில் ஒண்டிவீரன் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருநெல்வேலி

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் முத்துவளவன், எம்.சி.கார்த்திக், ராஜா, இரணியன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நெல்லையில் இறந்த பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் உடலுக்கு தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

1 More update

Next Story