திருப்பூர் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்


திருப்பூர் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
x
திருப்பூர்


விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று திருப்பூர் முக்கிய கடைவீதிகளில் பூைஜ பொருட்கள், விநாயகர் சிலைகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

விநாயகர் சதுர்த்தி

திருப்பூரில் இன்று (திங்கட்கிழமை)விநாயகர் சதுா்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள், பூக்கள் வாங்க திருப்பூர் கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்.

தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வீடுகளிலும், தெருக்களின் முக்கிய பகுதியிலும், கோவில்கள் முன் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.

பூஜை பொருட்கள்

திருப்பூர் பெருமாள் கோவில் வீதி, காட்டன் மார்க்கெட் வீதி உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் மக்கள் திரண்டனர்.

கடைவீதிகளில் விநாயகருக்கு பிடித்தமான அவல், பொறி, இனிப்புகள் மற்றும் சிறிய குடைகள், அருகம்புல் மாலை, வெள்ளெருக்கு மாலை ஆகியவை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். நேற்றுமுன்தினம் பூக்களின் விலை அதிகமாக இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்த நிலையில், திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள், மாலைகள் வாங்க மக்கள்ஆர்வம் காட்டினர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காவல் விநாயகர், மோட்டார் வாகன விநாயகர் உள்பட பல்வேறு வகை உருவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை தங்கள் குழந்தைகளுடன் வந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.


Next Story