திருத்தணி ஆர்.டி.ஓ அலுவலகம் முற்றுகை


திருத்தணி ஆர்.டி.ஓ அலுவலகம் முற்றுகை
x

திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ராஜநகரம் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜநகரம் பகுதியில் ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 100 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தினர் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் ஆதி திராவிடர் மக்களுக்கு நிள அளவீடு செய்து கல் நட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடந்த போரட்டத்தில் வருவாய் மற்றும் போலீஸ் துறையினரை அந்த பகுதியை சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கினர். இது சம்பந்தமாக ராஜநகரம் கிராமத்தை சேர்ந்த 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ராஜநகரம் கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து விசாரணைக்கு வருமாறு அழைப்பானை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் போச்சுவார்த்தை நடத்திய ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகம் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் உங்கள் தரப்பு கோரிக்கைகளை வக்கீல்களுடன் வந்து தெரிவிக்கலாம் அல்லது கோர்ட்டை நாடலாம். அப்போது விசாரணைக்கு அழைக்கப்பட்ட 6 பேரின் அழைப்பானையை ரத்து செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். 4 மணி நேரத்திற்கு மேலாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தால் அந்த பகுதி பரபரப்பு நிலவியது.


Next Story