திருவையாறில் அதிகபட்சமாக 39 மி.மீ. மழை பதிவு


திருவையாறில் அதிகபட்சமாக 39 மி.மீ. மழை பதிவு
x

திருவையாறில் அதிகபட்சமாக 39 மி.மீ. மழை பதிவு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திருவையாறு பகுதியில் அதிகபட்சமாக 39 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

பரவலாக மழை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும், இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் மழை பெய்யவில்லை. வெயில் காணப்பட்டது. பின்னர் மாலையில் சிறிது நேரம் மழை பெய்தது. தஞ்சையில் பெய்த மழையால் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி இருந்தது.

திருவையாறில் அதிகம்

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருவையாறு 39, பாபநாசம் 35, அய்யம்பேட்டை 23, தஞ்சை 22, மஞ்சளாறு 13, வல்லம் 6, குருங்குளம் 3, ஒரத்தநாடு 3, திருவிடைமருதூர் 3, கும்பகோணம் 2, திருக்காட்டுப்பள்ளி 1, பூதலூர் 1, நெய்வாசல் தென்பாதி 1, வெட்டிக்காடு 1, ஈச்சன்விடுதி 1, பேராவூரணி 1.


Related Tags :
Next Story