பாராக மாறிய திருவள்ளுவர் மன்றம்


பாராக மாறிய திருவள்ளுவர் மன்றம்
x

லால்குடி திருவள்ளுவர் மன்றம் பாராக மாறி உள்ளது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

லால்குடியை அடுத்த ரெட்டி மாங்குடி கிராமத்தில் மாதா கோவில் அருகே திருவள்ளுவர் மன்றம் உள்ளது. இந்த கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் அந்த கட்டிடத்தை குடிமகன்கள் மது குடிக்கும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மது குடித்துவிட்டு பாட்டில்களை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். எனவே அந்த கட்டித்தை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story