சேறும், சகதியுமான திருவள்ளுவர் சாலை


சேறும், சகதியுமான திருவள்ளுவர் சாலை
x

காட்பாடியில் சேறும், சகதியுமான திருவள்ளுவர் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

காட்பாடியில் திருவள்ளுவர் மெயின் ரோடு உள்ளது. இது மண்சாலையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காட்பாடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மண் சாலை சேறும், சகதியுமானது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், 'சேறும், சகதியுமாக உள்ள சாலையில் நடந்து செல்லவும், மோட்டார் சைக்கிளில் செல்லவும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் சேற்றில் சிக்கி தவறி கீழே விழுந்து எழுந்து சென்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என நாங்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மண் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தார் சாலையாக மாற்ற வேண்டும்' என்றனர்.

1 More update

Next Story