திருவண்ணாமலை: அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்...!


திருவண்ணாமலை: அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்...!
x
தினத்தந்தி 8 Sep 2022 10:45 AM GMT (Updated: 8 Sep 2022 10:47 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மோத்தக்கல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளியில் சத்துணவு சாப்பிடுவது வழக்கம்.

இந்தநிலையில் இன்று வழக்கம்போல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 37 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் 37 பேரையும் மீட்டு ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு 37 மாணவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட அந்த உணவு மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.


Next Story