திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்


திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
x

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். கழக தணிக்கைக்குழு உறுப்பினரும், துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி, கழக சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் பெ.சு.திருவேங்கடம், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார்.

பொதுப்பணித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தீர்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கருணாநிதியின் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்றியும், பொது கூட்டங்கள் நடத்தியும், ரத்த தானம், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியும் எழுச்சியாக கொண்டாட வேண்டும். கருணாநிதியின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தும், ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதிக்கு சிலை வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிநன்றி தெரிவித்து கொள்வது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அணிகள் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்களை அரங்குகளிலும், இணைய வழியாகவும், மாவட்ட அளவிலும், தொகுதி அளவிலும் நடத்துவது. திருவண்ணாமலை நகருக்கு வருகைத்தர உள்ள முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சியான வரவேற்பு அளித்தும், அவர் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்வதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், ராஜேந்திரன், வேல்முருகன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஓ.ஜோதி, நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story